Wednesday, February 11, 2009

நான் - நடிகன்

“நான்” ஒரு நடிகன்
நாளொரு நாடகமும்
பொழுதொரு வேடமுமாய்
அரிதாரம் தாங்குதலே
அவதார நோக்கமாய்...

எம்.ஜி.ஆர், சிவாஜி,
ரஜனி, கமல்,
விஜய், அஜித்,
சிம்பு, தனுஷ்
இவர்களா நடிகர்கள்?
இல்லை
சாருக்கான், ஜக்கிசான்
கிருத்திக்ரோஷன்,
சில்வஸ்ரர்ஸ்ரோலன்
இவர்களையா நடிகர் என்பாய்?

யாருக்கோவெல்லாம்
விசிறிகள் கூட்டம்
facebook-இல் கூட
அவர்களின் ஆட்டம்.

அடித்தது அதிர்ஷ்டம்
“கெசன்யா சுகினோவா” விற்கு,
நீயில்லாத உலகஅழகிப்போட்டி!

என்றொரு காதலன்
எழுதும் ஹைக்கூ-வாய்
இங்கே,

யாரையோவெல்லாம் சிபாரிசுசெய்கிறார்கள்
ஆஸ்கார் விருதுக்கு.
அமைதியாய் “நான்”!

இப்போது கூட,
ரோம் பற்றியெரிகையில்,
பிடில் வாசித்த நீரோ-வாய்
முல்லையில் மூங்கில்குருத்துகள்
மூசியெரிகையில்,
கொல்லையில் புல்லாங்குழல் கொண்டு
அடுப்பூதிப் பார்க்கும்
அரிதார புருஷன் “நான்”.

அழுகையொலியுடன் தான்
இத்திரையுலகிலென்
அறிமுகம் ஆரம்பமாயிற்று.

பெற்றவர் உற்றவர்
மற்றவர் எல்லாம்
கைதட்டி கைதூக்க
நடிப்புக் கலையெனக்கு
நன்றாகப் பட்டிற்று. அதுவெனக்கு
நன்றாகவும் பற்றிற்று.

நாளாக நாளாக
“நான்” கொண்ட கோலங்கள்
“நான்” ஆகி “நான்” ஆகி
எந்த “நான்”, “நான்”-இன் ”நான்”
என்றவொரு குழப்பத்தில்,
குழப்பத்தின் மயக்கத்தில்
“நான்”-களே “நான்”-ஆனேன்
நயம்பட்ட நடிகனானேன்.

மைந்தனாய், மருகனாய்,
மாமனாய், மச்சானாய்,
அண்ணனாய், தம்பியாய்
நண்பனாய், பகைவனாய்,
நல்லவொரு தலைவனாய்,
நனிசிறந்த தொண்டனாய்,
நயம் கெட்ட வஞ்சனாய்,
அன்பனாய், அரக்கனாய்,
அறிவுகெட்ட மூடனாய்,
கள்ளனாய், கயவனாய்,
கைவிட்ட காதலனாய்,
கரம்பிடித்த கணவனாய்,
தந்தையாய்ப் பாட்டனாய்...

எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்த வாதவூரனாய்
எல்லா வேடமும்
தரித்திளைத்த வேடதாரி “நான்”.

காலகாலமாய்
நடித்துவரும் என்நடிப்பை
நடிப்பாய்ப் பார்க்காமல்
பார்வையாளர் எல்லாமேயென்
பாத்திரத்துடன் ஒன்றிவிட்டதால்,
ஊரறியாமல் உலகறியாமலொரு
அரிதார புருஷன்
அவதார புருஷனாய்...

4 comments:

Anonymous said...

“நான்”-களே “நான்”-ஆனேன்
நயம்பட்ட நடிகனானேன்.

“நான்”-களே “நான்”-ஆகலாம் அதற்காக நயம்பட்ட நடிகனானேன் என்று சொல்வது மொனிட்டர் off பண்ணினால் கம்பியுட்டரே off என்ற கருத்தை வலுப்படுத்துவது போன்றது அப்படி பார்க்க போனால் ஒவ்வொரு சிலுக்கன் சில்லுகுள்ளும் நடப்பதை விபரிக்க சிலுக்கன் சில்லுகளினால் ஆன மொனிட்டர் பல ஆயிரம் வேண்டுமே
மாமா......?????


இப்படிக்கு உன் அம்புலி மாமா ஆரூரன்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Rahavan said...

vdf;Fs;NsNa ehd; ,Uf;f ehidj; njhiyj;jtdhf ehNd NjLtJ ifte;j ebg;gpd; cgup. ehid tpl md;igj; NjLNthk; thuPu;. cz;ikapy; njhiye;Jtpl;lJ md;G jhNd!

வலசு - வேலணை said...

வரவிற்கும் விமர்சனங்களிற்கும் நன்றிகள்!!!

rav said...

எனக்குள்ளேயே நான் இருக்க நானைத் தொலைத்தவனாக நானே தேடுவது கைவந்த நடிப்பின் உபரி. நானை விட அன்பைத் தேடுவோம் வாரீர். உண்மையில் தொலைந்துவிட்டது அன்பு தானே!