Sunday, March 8, 2009

நான் சும்மா

அம்மாவும் அப்பாவும்
சும்மா இருக்கையில்
சும்மா இராததால்
சும்மா “நான்” ஜனித்தேன்

சும்மாவே பிறந்ததாலோ
சும்மா சும்மா அழுதேன்
சும்மா சும்மா அடம்பிடித்து
அம்மாவிற்குலை வைத்தேன்

சும்மா இருப்பது
“குவாகுவா” வென்றோ
“puppy shame” என்றோ
கேலிசெய்து,
சும்மாவிருந்தவென்னை
ஆடைகட்டி அழகுசெய்தர்
சும்மா படிக்க வைத்தர்
சும்மாவே வளர வைத்தர்

சும்மா சும்மாவென
எல்லாமே சும்மாவாய்...
அம்மாண “நான்“ -ஆல,
சும்மா இருக்கேலா.

சும்மா பொழுதுபோக
வலைப்பின்னல் நெய்தேன்
நண்பன் “call” எடுத்து
என்னப்பா செய்கிறாயாம்.
சும்மாவே சொன்னேன்
சும்மா தான் இருக்கிறேன்
சும்மா இருக்காதே
ஏதாவது செய்யென்றான்
என்னசெய்யவெனக் கேட்க
சும்மா ஏதாவது செய்யட்டாம்.

என்னைய்யா சும்மா?
எதுவையா சும்மா?
சும்மா உட்காந்து யோசிக்க
சும்மா சும்மா எண்ணங்கள்.

வாழ்க்கை சும்மா
வாலிபம் சும்மா
பிறப்பு சும்மா
இறப்பு சும்மா
சாமி சும்மா
சாத்தான் சும்மா
ஆண் சும்மா
பெண் சும்மா
அது சும்மா
இது சும்மா

எல்லாமே சும்மாவாய்
சும்மாவும் சும்மாவாய்
சும்மா சும்மா
சும்மா வளர்ந்தது.

காய்ந்த காட்டிடை
கக்கிய தீயதாய்
“நான்” இனை நோக்கியும்
சும்மா வந்தது.

சும்மா வந்தது
சுற்றி வளைத்தது.
சும்மாவிருந்த “நான““-ஐ
சூழ்ந்து நின்றெரித்தது.
எரிந்து முடிந்து
எஞ்சியதெதுவென
சும்மா பார்த்தேன்.
அட!
“சும்மா”.

நான் சும்மா
நீ சும்மா
போடா சும்மா.

8 comments:

Anonymous said...

சும்மா சொல்லக்கூடாது சும்மா கவிதை கூட சுமாராக தான் இருக்கு; நான் சும்மா, நீ சும்மா, என்று அந்த பெண்ணை அம்மா ஆக்கும் முயற்சியை பெற்றோரின் ஆசீர்வாதற்கு பின் ஆரம்பிக்கவும்,சும்மா ஒரு safety க்கு தான் சொன்னேன்,அல்லது சும்மா இருக்காமல் "சும்மா" றேடியோ கேட்கவும் அதுவும் போர் அடித்தால் சும்மா மூச்சு விட்டு கொண்டாவது இருக்கவும்,சும்மா போரடிக்காமல் இருக்க உமது இருப்பு என் போன்றவர்களுக்கு தேவைப்படுகிறது
நன்றி:-க.ஆரூரன்

Anonymous said...

//
அம்மாவும் அப்பாவும்
சும்மா இருக்கையில்
சும்மா இராததால்
சும்மா “நான்” ஜனித்தேன்
//

சும்மா லொள்ளுப் பண்றியேப்பா

ttpian said...

சந்தோசமா இருக்கிற நேரத்தில்....இது என்ன கொடுமை?
பேசாம "அன்க...இங....போனமா....கப்,சிப்ன்னு காரியத்தை முடிச்சமா...

கானா பிரபா said...

சும்மா கலக்கியிருக்கிறியள் கண்டியளோ

சாணக்கியன் said...

ஆன்மீக தத்துவமே சொல்லிட்டியளே!

வலசு - வேலணை said...

தங்களின் வருகைகட்கும், கரு்த்துகட்கும் மிக்க நன்றி ஆரூரன், ttpian, கானா பிரபா மற்றும் சாணக்கியன்

யசோதா.பத்மநாதன் said...

உங்கள் தத்துவ விசாரம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது.'தன்னை அறியும் விஞ்ஞானம்' என்று சுவாமி பிரபு பாதா எழுதிய புத்தகம் ஒன்று இருக்கிறது.கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

பல சந்தேகங்களுக்கும் வினாக்களுக்கும் விடை கிடைக்கும்.

வலசு - வேலணை said...

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி மணிமேகலா.

வாசித்துப் பார்க்கிறேன்