ஹாய்!
என்ன?
பொழுது போகலையா?
சோம்பல் வருகிறதா?
வா!
உன்னைத் தான்
தேடிக் கொண்டிருக்கும்
உன் உயிர்த்தோழன்
சாத்தான் “நான்”.
எப்படி
நேரேற்றத்திற்கு எதிரேற்றமுண்டோ,
வடமுனைவுக்கு தென்முனைவுண்டோ,
அப்படியே இறைவனுக்கு எதிர்மறையாய்
அவன் பிடியிலிருந்து
மீட்டு உனை இரட்சிப்பதற்காயான,
இயற்கையின் மறுபுள்ளி “நான்”.
நீ தேடியலையாமலே
உனைத்தேடி
“பல வடிவங்களில்”
வருபவன்
“நான்” மட்டுமே.
ஏதேன் தோட்டத்தில்
ஏவாளுடனான “என்”
முதற் சந்திப்புடன்
உனக்கு “என்” அறிமுகம்
ஆரம்பித்திருக்கலாம்.
ஆதாம் ஆப்பிள்
கடித்திருக்காவிடின்
இப்போதுகூட நீ
ஆண்டவன் சொற்கேட்பதான
ஆணவத்துடன்
அம்மணமாய்....
பைபிளின்
பழைய ஏற்பாட்டுடன்
சூரியன் புவியைச்
சுற்றுவதான அறியாமையுடன்...
உனக்குள் இருந்த
ஊற்றுக் கண்ணை
திறந்து விட்டவன் “நான்”
இன்று சந்திரனுக்கு
சந்திராயன் அனுப்பிவிட்ட
ஆனந்தக் களிப்பையும்
தந்தவன் “நான்”
“நான் நிரந்தரமானவன்
எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை” - என்று
கண்ணதாசனை கவிசொல்ல
வைத்தவனும் “நான்” தான்.
சிலருக்கு “நான்”
முதலிலொரு
மதுவில் தரிசனம் தருவேன்
பின் கால்(ா) முளைக்கவொரு
காரிகையிலாவேன்.
பலருக்கு “நான்”
கோபத்தின் வெளிப்பாடாய்
Ego -வில் தெரிவேன்.
பின்னாளில் அவர்கள் “என்”
பக்தர்களாவார்கள்.
அட நீயும் “என்”
தொண்டனாகவா
ஆசைப்படுகிறாய்?
“நான்” என்ன “நீ” என்ன
எல்லாமே “நான்” தான்.
“வாடா என் வெட்டிப்பயலே”
*************************
சும்மா வெட்டியாயிருப்பது எனப்படுவது யாதெனில்
சாத்தானாகிய எனைநோக்கி கடுந்தவம் புரிவதாகும்.
Friday, November 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//சும்மா வெட்டியாயிருப்பது எனப்படுவது யாதெனில்
சாத்தானாகிய எனைநோக்கி கடுந்தவம் புரிவதாகும். //
கவிதை நன்றாக இருக்கின்றது... நான் பல நேரங்களில் வெட்டியாகத்தான் இருக்கின்றேன்..அப்போ... !
Post a Comment